வயலில் அரிய வகை நட்சத்திர ஆமை

வயலில் அரிய வகை நட்சத்திர ஆமை சிக்கியது.;

Update:2022-10-14 01:14 IST

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள மன்னார்கோவில் அருகே மலைப்பகுதியையொட்டி சுந்தரம் என்பவரது விவசாய நிலம் உள்ளது. நேற்று காலை அவரது மகன் பாவநாசன் வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பங்கி பூக்களை பறித்து கொண்டிருந்தார். அப்போது வாய்க்காலில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அவர் இதுகுறித்து நாட்டார்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பாலுசாமி மூலம் பெரம்பலூர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த சிறுவாச்சூர் காவல் பகுதி வனக்காப்பாளர் ரோஜாவிடம் அந்த அரிய வகை நடசத்திர ஆமை ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்