ஊர்நல அலுவலருக்கு தனி அறை ஒதுக்க வேண்டும்

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஊர்நல அலுவலருக்கு தனி அறை ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Update: 2023-10-03 19:00 GMT
வால்பாறை பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் திருமணங்கள் செய்யவுள்ள பெண்கள் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் பெண்களுக்கான திட்டங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காக விண்ணப்பம் செய்வதற்கு தினமும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த சமூக நலத்துறையின் திட்டங்களுக்காக விண்ணப்பங்களை பெற்று விண்ணப்ப படிவங்களை சரி பார்த்து உரிய விளக்கங்கள் சொல்வதற்காக ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் ஊர்நல பெண் அலுவலர் ஒருவர் வால்பாறை பகுதிக்காக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஊர் நல அலுவலர் அமர்ந்து பெண்களிடமிருந்து விண்ணப்ப படிவங்களை பெறுவதற்கென அலுவலக அறை இது நாள் வரை ஒதுக்கப்படவில்லை. ஊர் நல அலுவலர் நகராட்சி அலுவலகத்தின் வராண்டாவில் அமர்ந்து பயனாளிகளிடமிருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று உதவி செய்து வருகிறார். எனவே இது குறித்து பொள்ளாச்சி சப் கலெக்டர் நடவடிக்கை எடுத்து பெண்கள் பாதுகாப்பு திட்டத்திற்காக நகராட்சி அலுவலகம் அல்லது தாசில்தார் அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்று விண்ணப்ப படிவங்களை கொடுக்க வந்திருந்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்