செருப்பு கடைக்கு தீ வைப்பு

திருப்பத்தூரில் செருப்பு கடைக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பாக ஊழியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-08-21 23:27 IST

திருப்பத்தூர் டவுன் கோட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது ஆமீன் (வயது 37). திருப்பத்தூர் பெரியகுளம் பகுதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் கடை தீப்பற்றி எரிவதாக அவருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த செருப்புகள் தீயில் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து முகமது அமின், கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கடையை திறந்து தீ வைத்து விட்டு தப்பி ஓடுவது தெரியவந்தது. இது குறித்து டவுன் போலீசார் கடையில் பணி புரியும் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்