தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு

வாணாபுரம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி தங்க சங்கிலி பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2023-07-01 15:27 IST

வாணாபுரம்

வாணாபுரம் அருகே உள்ள மெய்யூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் என்பவரின் மனைவி கலைவாணி (வயது 37). இவர் நேற்று  இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த கலைவாணியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த கலைவாணியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து வாணாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்