அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-09-29 23:46 IST

ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையை சுத்தம் செய்ய ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது, சுமார் 10 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை கவனித்த ஊழியர்கள் உடனே தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சாரை பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அருகே உள்ள காப்புக் காட்டில் கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்