கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

திருமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2023-05-05 19:37 GMT

திருமங்கலம்,

திருமங்கலம் அருகில் எலியார்பத்தி கிராமத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் உள்ள கிணற்றில் சுமார் 5 வயது உடைய ஆண் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்தது. அருகில் இருந்தவர்கள் மானை மீட்க முயன்று முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கூடக்கோவில் போலீசாருக்கு தகவல் அளித்தனர். கூடக்கோவில் போலீசாரால் காரியாபட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறப்பு நிலைய அலுவலர் சசிகுமார் தலைமையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி கிணற்றில் தண்ணீருக்குள் தத்தளித்த மானை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்டு மான் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்