ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டம்

Update:2023-08-22 01:00 IST

காரிமங்கலம் 6-வது வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் நேற்று மாலை தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி ஒரு சிலரை மட்டும் கலெக்டர் சந்திக்க ஏற்பாடு செய்தனர். இதைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பேர் கலெக்டர் சாந்தியிடம் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பலமுறை மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே ஆக்கிரமிப்பை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக இதே பொதுமக்கள் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க கோரி காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்