மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-09-08 23:08 IST

திருப்பத்தூர் அருகே காக்கனாம்பாளையத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் மோகன் (வயது 22), பால் வியாபாரி.

இவர் நேற்று கூடபட்டில் இருந்து காக்கனாம்பாளையம் செல்லும் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது மோட்டார்சைக்கிளில் இருந்து மோகன் திடீரென கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவைரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்