மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.;

Update:2022-09-16 16:48 IST

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மானாமதி மங்கலம்மாள் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சக்திவேல் மானாமதி அடுத்த தண்டரை கூட்ரோட்டில் முடி வெட்டும் கடை நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சேர்ப்பாக்கம் என்ற இடத்திற்கு சென்று விட்டு மீண்டும் தண்டரை கூட்ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்