ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

வேதாரண்யம் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி;

Update:2023-08-22 00:15 IST

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கொள்ளு தீவை சேர்ந்தவர் பாலு மகன் மணிமாறன் (வயது 21). மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியன்பள்ளியை நோக்கி வந்த டெமு ரெயில் மணிமாறன் மீது மோதியது. இதில் மணிமாறன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்