வீடுபுகுந்து திருடிய வாலிபர் கைது

வீடுபுகுந்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-10-05 22:58 IST

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 68) என்பவரது வீட்டில் 12 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கோலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் புதுகேசாவரம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பாணாவரம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் மதன் (30) என்பதும், முனுசாமி வீட்டில் நகைகள் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மதனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்