கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உயிருடன் மீட்கப்பட்டார்.;
பசுபதிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வாலிபர் ஒருவர் தவறி விழுந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கிணற்றில் இறங்கி அந்த வாலிபரை உயிருடன் மீட்டனர்.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி சூர்யா (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.