அரசு அலுவலகம் மீது மரம் சாய்ந்தது

அரசு அலுவலகம் மீது மரம் சாய்ந்தது;

Update:2023-05-02 00:15 IST

சரவணம்பட்டி

கோவை சத்தி ரோடு சரவணம்பட்டி பஸ் நிறுத்த பகுதியில் வருவாய் அலுவலகம் மற்றும் பழமை வாய்ந்த சத்திரம் உள்ளது. இதன் அருகே ராட்சத ஆலமரம் நின்றிருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சரவணம்பட்டியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மரத்தின் ஒரு பகுதி வேரோடு சாய்ந்து வருவாய் அலுவலகம் மற்றும் சத்திரம் மீது விழுந்தது. இதனால் மேற்கூரை சேதமடைந்தது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் அந்த மரம் அகற்றப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்