அழகுமுத்துக்கோன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

சங்கரன்கோவிலில் அழகுமுத்துக்கோன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.;

Update:2023-07-13 00:30 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் வட்டார யாதவர் அபிவிருத்தி சங்கம் சார்பில் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சங்கரன்கோவில் வட்டார யாதவ சமுதாய தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் திருமலைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஸ்நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் சங்கரன்கோவில் யூனியன் தலைவர் லாலா சங்கரபாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்ரமணியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, மதிமாரிமுத்து, நகர செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, மாணவரணி உதயகுமார், கலை இலக்கிய அணி வசந்த், தொண்டரணி அப்பாஸ், ம.தி.மு.க. நகர செயலாளர் ரத்தினகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர்மைதீன், தி.மு.க. மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ்.மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்