விபத்தில் பெண் பலி

கழுகுமலை அருகே விபத்தில் பெண் பலியானார்.

Update: 2023-02-11 18:45 GMT

கழுகுமலை:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒத்தையால் மேட்டுப்பட்டி நடுதெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 52). இவர்களின் மகன் கருப்பசாமி (27). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவேங்கடம் அருகே உள்ள தென்கரைக்கு வந்து விட்டு, மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.

கழுகுமலை அருகே உள்ள முக்கூட்டு மலை பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது, சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கோவிந்தம்மாள், கருப்பசாமி ஆகியோர் தவறி கீழே விழுந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோவிந்தம்மாளை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்