கடம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

கடம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-22 18:26 IST

கடம்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கசவநல்லாத்தூர் வைஷாலி நகர் பகுதியில் ஒரு நபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து சோதனை செய்தபோது அவர் கையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை விற்க முயன்ற நல்லாத்தூர் வைஷாலி நகரை சேர்ந்த கணேஷ் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்