மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி;

Update:2022-06-17 19:39 IST

கோவை

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது31). இவர் நேற்று ரத்தினபுரி சின்னதம்பி தெரு ஜங்சனில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் நிலைதடுமாறி சாலை யோரம் இருந்த சுவரில் மோதி கீழே விழுந்தார். அதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்