வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-07-15 23:23 IST

ஜோலார்பேட்டை

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார் இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் வாணியம்பாடி அருகே குந்தானி மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் விநாயகம் (வயது 40) என்பது தெரிய வந்தது.

மேலும் இவர் நாட்டறம்பள்ளி அடுத்த மல்லபள்ளி சுண்ணாம்பு குட்டை பகுதியில் வசித்து வரும் அமராவதி (62) என்பவரின் வீட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருடியது ஒப்புக்கொண்டார். இதனையடுத்து விநாயகத்தை போலீசார் கைது செய்து 2 பவுன் தங்க நகையை மீட்டனர்.

பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்