சேலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை - லாரி கிளீனர் கைது

சிறுமியை திருப்பூருக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-28 08:10 IST

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த லாரி கிளீனர் லோகநாதன் என்பவர், அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருப்பூருக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து ஆத்தூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சிறுமியை கடத்திச் சென்ற லாரி கிளீனர் லோகநாதனை கைது செய்த போலீசார், சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அந்த சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்