அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு;

Update:2023-07-28 01:15 IST

வால்பாறை

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கல்லூரியின் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பின்னர் தேசிய மாணவர் படையின் மாணவி ஒருவர், அப்துல் கலாமின் சிறப்புகள் குறித்து பேசினார். தொடர்ந்து பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், அப்துல் கலாம் உருவப்படத்துக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்