அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிப்பு;

Update:2023-07-28 00:15 IST

மணல்மேடு:

மணல்மேடு ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், அப்துல்கலாமின் 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பள்ளி தலைவர் குலசேகரன், அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பள்ளி மேலாளர், முதல்வர், நிர்வாக அலுவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் இல்லா பணியாளர்கள் கலந்துகொண்டு அப்துல்கலாம் உருவபடத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பள்ளி நிர்வாக அலுவலர் சீனிவாசன் , அப்துல்கலாம் பற்றி புகழுறையாற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்