ஆர்டர்லி முறையை ஒழித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஆர்டர்லி முறையை ஒழித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2022-11-18 15:32 IST

சென்னை,

ஆர்டர்லி பணியை செய்ய மறுத்ததால் பழிவாங்கும் நோக்கில் அதிகாரிகள் தன்னை பணிநீக்கம் செய்ததாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றிய காவலர் முத்து என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்திய அரசியலமைப்பு சட்டபிரிவு 21, மனிதர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அதன்படி, காவலரை ஆர்டர்லியாக பணியாற்ற வற்புறுத்துவது கண்ணியத்திற்கு எதிராக உள்ளது. எனவே ஆர்டர்லியாக பணியாற்ற மறுத்த காவலர் முத்துவை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, அவருக்கு ஓராண்டுக்கு ஊதிய குறைப்பு தண்டனையுடன் பணி வழங்க உத்தரவிட்டார்.

ஆர்டர்லி முறையை ஒழித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஆர்டர்லி முறையை பின்பற்றுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஆர்டர்லியாக பயன்படுத்தப்பட்ட காவலரின் ஊதியத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்