எஸ்.ஐ.ஆர்: ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்

உண்மையான தேர்தல் நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.;

Update:2025-12-19 21:46 IST

சென்னை,

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதுமான முழு பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 97,32,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: ஜனநாயகம் காப்பாற்றாப்பட்டுள்ளது. உண்மையான தேர்தல் நடைபெற உள்ளது. பொய் தேர்தல் அல்ல. நம்மை ஏமாற்றுபவர்கள் ஏமாந்துபோகும் தேர்தலாக வரப்போகும் தேர்தல் இருக்கும்.” என்றார்.

 

Tags:    

மேலும் செய்திகள்