கடலூரில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் செயின் பறிப்பு - 2 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 சவரன் செயின் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.;
கடலூர்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள அரசடிகுப்பத்தை சேர்ந்த காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தேவர். இவரது மனைவி வனிதா, கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர், வனிதா அணிந்திருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், திருடப்பட்ட 4 சவரன் செயின் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.