பூர்வகுடி பழங்குடியினர் உற்பத்தியாளர் சங்க கூட்டம்

கோத்தகிரியில் பூர்வகுடி பழங்குடியினர் உற்பத்தியாளர் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2023-10-24 19:00 GMT


நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களான கோத்தர், இருளர், தோடர், குரும்பர் ஆகிய பழங்குடியின மக்கள் ஒன்றிணைந்து பூர்வகுடி உழவர் உற்பத்தியாளர் சங்கத்தை தொடங்கி விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சங்கத்தின் முதலாமாண்டு செயற்குழு கூட்டம் கோத்தகிரி காந்தி மைதான புயல் நிவாரண கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் சுதா தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் மகேஸ்வரி, சிவலிங்கம், செயலாளர் புஷ்ப குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பூர்வகுடி பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் அனைத்து பழங்குடியின சமுதாய மக்களுக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள், உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர்கள் சுயதொழில் செய்ய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகள் உள்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்