சந்தனமரம் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்

சந்தனமரம் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்.;

Update:2023-08-19 01:51 IST

ஏற்காடு:

ஏற்காடு பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு சந்தன கட்டை கடத்தப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனவர்கள் சக்திவேல், ஷஷாங் ரவி ஆகியோர் ஏற்காடு பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்றவரை பிடித்தனர். அவரிடம் 12 கிலோ எடையுள்ள சந்தன கட்டை சிராய்ப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே வனத்துறையினர் அவரை கைது செய்தனர். அவர், ஏற்காடு வாழவந்தி பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் ரங்கராஜ் (வயது 59) என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக தமைறைவாக இருந்த குண்டூர் பகுதியை சேர்ந்த ஆண்டி மகன் வெள்ளையன் என்பவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். கைதானவர்களுக்கு ரூ.2 லட்சத்து 80 அபராதம் விதித்தனர். இதற்கிடையே கைதானவர்களுடன் தொடர்பில் இருந்த சந்தன கட்டை கடத்தலில் தொடர்புடைய வெங்கடேசன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 துண்டுகளாக இருந்த 7 கிலோ சந்தன கட்டையை வனத்துறையினர் மீட்டனர். அவருக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்