3 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ஒன் டூ ஒன்’ சந்திப்பு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.;

Update:2025-12-23 12:56 IST

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் நேருக்கு நேர் ஒன் டூ ஒன் முறையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3 சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி திமுக நிர்வாகிகளை ஒன் டூ ஒன் முறையில் சந்தித்த மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்