நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

வீரவநல்லூர் பகுதியில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-09 02:12 IST

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு அடிதடி வழக்கில் ஈடுபட்ட வீரவநல்லூர் கடையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் ராஜா (வயது 23) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாத காலமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனால் சேரன்மாதேவி கோர்ட்டில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கார்த்திக் ராஜாவை வீரவநல்லூர் போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிைறவேற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்