அம்பேத்கர் இல்லாமல் இந்திய அரசியல் இல்லை; அன்புமணி ராமதாஸ் புகழாரம்

அம்பேத்கர் ஆற்றிய அரசியல், சமூகப்பணிகளை நினைவு கூர்வோம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்;

Update:2025-12-06 11:13 IST

சட்ட மேதை அம்பேத்கரின் 70வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் அம்பேத்கருக்கு புகழாரம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அம்பேத்கர் இல்லாமல் இந்திய அரசியல் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டியுமான அண்ணல் அம்பேத்கரின் 70-ஆம் நினைவு நாள் இன்று. இந்த நாளில் அண்ணலை வணங்குகிறேன்.

அண்ணல் அம்பேத்கர் இல்லாமல் இந்திய அரசியல் அரசியல் இல்லை. சமூகநீதியும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும் அவர் இல்லாமல் சாத்தியமாகியிருக்காது. அவர் ஆற்றிய அரசியல் பணிகளையும், சமூகப் பணிகளையும் இந்த நாளில் நினைவு கூர்ந்து அவரை அனைவரும் போற்றுவோம்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்