கிராம முன்னேற்றம் குறித்து உறுதி மொழி ஏற்பு

கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம முன்னேற்றம் குறித்து உறுதி மொழி ஏற்கப்பட்டது.

Update: 2023-09-30 14:52 GMT

வளர்ந்துவரும் வட்டாரத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வது குறித்த கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், காணொலி காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சிக்கு கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் த.கல்பனா தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், சக்திவேல், ஆனந்தஜோதிலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை இடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பா.வேலு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள், வேளாண்மைத் துறை அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், குழந்தை வளர்ச்சிதிட்ட அலுவலர்கள், ஊட்டச்சத்து திட்ட அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது கிராம முன்னேற்றம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்