வாகனம் மோதி டிரைவர் சாவு

வாகனம் மோதி டிரைவர் உயிரிழந்தார்.;

Update:2022-08-11 23:44 IST

சாயல்குடி,

சாயல்குடி அருகே ஏ.உசிலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது 52). தனியார் பயிற்சி வாகன டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று உத்தரகோசமங்கை அருகே களரி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய மோட்டார்சைக்கிளில் சென்றார். வாலிநோக்கம் அடுத்த ஓடைக்குளம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து வாலிநோக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்