பள்ளிபாளையம் அருகே அரசு- தனியார் பஸ் மோதல்; பயணிகள் காயம்

பள்ளிபாளையம் அருகே அரசு- தனியார் பஸ் மோதல்; பயணிகள் காயம்

Update: 2022-11-04 18:45 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே 5 பனை பகுதியில் நேற்று மாலை திருச்செங்கோட்டில் இருந்து அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி தனியார் பஸ் வந்தது. அந்த சமயம் 2 பஸ்களும் எதிர்பாராதவிதமாக மோதி கொண்டன. இந்த விபத்தில் 2 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்து சேதம் அடைந்தன. சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்