விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.;
அன்னதானப்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி தபால் நிலைய தெரு பகுதியை சேர்ந்தவர் மணிராஜ பெருமாள் (வயது 32). பிளக்ஸ் டிசைனிங் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் உறவினரை பார்க்க, தனது ஸ்கூட்டரில் நெத்திமேடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.
கரிய பெருமாள் கோவில் கரடு நுழைவு ரோடு அருகே, எதிரே வந்த கன்டெய்னர் லாரியும், ஸ்கூட்டரும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மணிராஜ பெருமாள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அன்னதானப்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.