நெல்லை வந்தே பாரத் உள்பட 4 ரெயில்களின் நேர அட்டவணை மாற்றம்

மதுரையில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22624), மதுரையில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.;

Update:2026-01-01 02:10 IST

கோப்புப்படம்

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று (1-ந்தேதி) முதல் சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், திருச்சி-திண்டுக்கல் டெமு ரெயில், மதுரை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில், எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரெயில்களுக்கான நேர அட்டவணை மாற்றப்பட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்கு (வண்டி எண். 20665), ஒரு சில நிறுத்தங்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி, புதிய நேர அட்டவணைபடி திருச்சிக்கு இரவு 7 மணிக்கும், திண்டுக்கல் 7.58 மணிக்கும், மதுரை 8.45 மணிக்கும், விருதுநகர் 9.20 மணிக்கும், கோவில்பட்டி 9.48 மணிக்கும், நெல்லை இரவு 11 மணிக்கு சென்றடையும்.

* சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635) புதிய நேர அட்டவணைப்படி, எழும்பூரில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் 1.40, செங்கல்பட்டு 2.08, விழுப்புரம் மாலை 3.30, விருத்தாச்சலம் 4.14, அரியலூர் 4.49, ஸ்ரீரங்கம் 5.30, திருச்சி 6.05, மணப்பாறை 6.39, திண்டுக்கல் இரவு 7.17, சோழவந்தான் 7.49, மதுரை இரவு 8.35 மணிக்கு சென்றடையும்.

* மதுரையில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22624), மதுரையில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. புதிய நேர அட்டவணைப்படி, மதுரையில் இருந்து இரவு 8.35 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும்.

* திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் டெமு ரெயில் (76835), புதிய நேர அட்டவணைப்படி, திருச்சியில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு, பூங்குடி மாலை 6.44, கொளத்தூர் 6.53, சமுத்திரம் இரவு 7.01, மணப்பாறை 7.13, செட்டியபட்டி 7.23, வையம்பட்டி 7.30, கல்பட்டிச்சத்திரம் 7.39, அய்யலூர் 7.49, வடமதுரை 7.59, தாமரைபாடி 8.10, திண்டுக்கல் ஜங்சன் இரவு 9.05 மணிக்கும் சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்