சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு பெற கால அவகாசம் நீட்டிப்பு

இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-01 02:26 IST

சென்னை,

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வினியோகம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடம் இருந்து 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனுக்கள் டிசம்பர் 31-ந்தேதி (நேற்று) வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை உற்சாகத்துடன் அளித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க வருகிற 15-ந்தேதி வரை விருப்ப மனுக்கள் பெறுவது நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்