பாப்பாரப்பட்டி அருகே விபத்தில் கட்டிட மேஸ்திரி சாவு

Update:2023-07-02 01:00 IST

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள திப்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பையன் (வயது 57). கட்டிட மேஸ்திரி. இவர் கடத்தூர் அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டியில் வசித்து வந்தார். இவர் வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று பென்னாகரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நல்லானூர் அருகே அருகே வந்த அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சின்னப்பையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்