மாவட்டம் முழுவதும்120 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

Update:2023-09-04 00:15 IST

நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தர்மதுரை தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை அன்னை தமிழை காக்க ஆன்மிகத்தை வளர்ப்போம் என்கிற தலைப்பில் கொண்டாடுவது எனவும், நாமக்கல் மாவட்டம் முழுவதும் 120 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, அனைத்து ஒன்றியத்திலும் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்துவது, வீட்டுக்கு ஒரு விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாதன், மாவட்ட செயலாளர்கள் ஜெகதீசன், சரவணன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜசேகர், ரமேஷ், முத்துக்குமரன் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்