கிணத்துக்கடவு வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்

பல கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டு உள்ளதால் கிணத்துக்கடவு வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்

Update: 2022-07-15 14:10 GMT

கிணத்துக்கடவு

பல கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டு உள்ளதால் கிணத்துக்கடவு வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அகல ரெயில் பாதை

கோவை -பொள்ளாச்சி இடையே இருந்த மீட்டர் கேஜ் ரெயில் பாதை, அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந்தேதி முதல் கோவை ரெயில் நிலை யத்தில் இருந்து போத்தனூர் -பொள்ளாச்சி இடையே ரெயில் சேவை தொடங்கியது.

முதலில் கோவையில் இருந்து போத்தனூர் -பொள்ளாச்சி வழித்தடத்தில் ஒரே ஒரு ரெயில் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த வழித்தடத்தில் காலை, மாலை நேரங்களில் 2 ரெயில்கள் கோவையில் இருந்து போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு சென்று வந்தன. இது போல் கோவையில் இருந்து பழனி செல்லும் ரெயில் மதியம் 2.30 மணி அளவில் கிணத்துக்கடவு ரெயில் நிலையம் வந்து செல்கிறது.

நிற்காத நெல்லை ரெயில்

அந்த வகையில் கிணத்துக்கடவு வழியாக 3 ரெயில்கள் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அதில் கல்லூரி மாணவ- மாணவிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பயணம் செய்து வருகின்றனர். அந்த ரெயில்கள் வரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கிணத்துக்கடவு ரெயில் நிலையம் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக நெல்லைக்கு வாராந்திர ரெயில் விடப்பட்டு உள்ளது. அந்த ரெயில் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இதனால் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அந்த ரெயில் சேவையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

உள்கட்டமைப்பு

கிணத்துக்கடவு ரெயில் நிலையம் செயல்பட தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து பல கோடி செலவில் அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் கிணத்துக்கடவில் 3 ரெயில்கள் மட்டுமே நின்று செல்கிறது.

இதனால் பல கோடி செலவில் ஏற்படுத்தப்பட்ட உள்கட்ட மைப்பு பயன்படுத்தப்படா மல் உள்ளது. எனவே கிணத்துக்கடவு ரெயில் நிலையம் வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க ரெயில்வே நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இது குறித்து பயணிகள் கூறியதாவது:-

கூடுதல் ரெயில்கள்

கோவை- பொள்ளாச்சி இடையே உள்ள கிணத்துக்கடவு வழி யாக கூடுதல் ெரயில்களை இயக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கிணத்துக்கடவு பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் வெளி மாவட் டங்களை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.

எனவே நெல்லை, ராமேசுவரம், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்க ளுக்கு கிணத்துக்கடவு வழியாக ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி மற்றும் கோவையில் இருந்து கிணத்துக்கடவு வருவதற்கு ரெயிலில் ரூ.30 கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

கட்டணம்

ஆனால் ரெயில் கட்டணத்தை விட பஸ்சில் குறைந்த கட்ட ணமே வசூலிக்கப்படுகிறது. எனவே கட்டணத்தை ரெயில்வே துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கு வர பஸ் வசதி இல்லை.

இதனால் ஆட்டோவுக்கு செலவு செய்து பஸ் நிலையத்துக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் கிணத்துக்கடவு பயணிகள் ரெயிலை தவிர்க்கும் நிலை உள்ளது. எனவே ரெயில்கள் வரும் நேரங்களில் பயணிகள் ஏற்றிச் செல்ல வசதியாக பஸ் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்