பதவி சண்டையால் அ.தி.மு.க. அழிவு பாதைக்கு செல்லும் -சசிகலா பேச்சு

கட்சியில் பதவிக்காக போடும் சண்டை அ.தி.மு.க.வை அழிவுபாதைக்கு கொண்டு செல்லும் என்று வானூரில் சசிகலா கூறினார்.

Update: 2022-07-07 21:53 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மரக்காணம் பகுதியில் கடந்த 2 நாட்களாக சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக நேற்று வானூர் சட்டமன்ற தொகுதியில் அவர் சுற்றுப்பயணம் செய்தார்.

திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் பிரசார வாகனத்தில் இருந்தபடி தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது:-

ஜெயலலிதா மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை கொண்டு வந்தார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் அந்த திட்டங்கள் நிறுத்தப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது.

மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை எனது தலைமையில் கொண்டு வருவேன்.

அழிவு பாதை

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க. தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. எனவே கட்சியினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைமை வேண்டும். கட்சியில் பதவிக்காக போடும் சண்டை, அ.தி.மு.க.வை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்