கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-05-20 12:50 GMT

அரக்கோணம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவுநாளை ஆண்டு தோறும் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பழனி ராஜன் தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது அகிம்சை, சகிப்பு தன்மை உடைய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கை உள்ள இந்திய மக்களாகிய நாம், எவ்வித கொடுஞ் செயல்களை முழு ஆற்றலோடு எதிர்த்து எல்லா மக்களிடமும் அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்த்திடவும், ஊறு விளைவிக்கும் சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் உறுதி கூறுகிறோம், எனக்கூறி தாசில்தார் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், இடர்பாடு நிவாரண தாசில்தார் ராஜராஜன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்