50 வருடங்களுக்கு பிறகு காவேரி வன விலங்கு சரணாலயத்தில் தென்பட்ட புலிகள்..!

ஜூவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகள் மூலம் இரண்டு புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளது.

Update: 2024-02-02 16:15 GMT

சென்னை,

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் ஓசூர் வனக்கோட்டத்தில் ஜூவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 50 வருடங்களுக்கு பிறகு இரண்டு புலிகள் தென்பட்டது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 4 முதல் 5 வயதுள்ள மற்றும் 8 முதல் 9 வயதுள்ள இரண்டு ஆண் புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளதாக ஓசூர் வன உயிரினக்காப்பாளர் கார்த்திகாயினி தெரிவித்ததாக தலைமை வன உயிரினக்காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, தெரிவித்துள்ளார். ஜூவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் ஜனவரி 2024-ல் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகள் மூலம் இந்த இரண்டு புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளது தெரிய வருகிறது.

ஜூவாலகிரி காப்புக்காடுகள் சரகமானது, சமீபத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தையும் ஒட்டி அமைந்துள்ள தொடர் பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் காணப்படுவது, பன்னார் கட்டா தேசிய பூங்கா மற்றும் அதன் அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருந்து புலிகள் இங்கு வசிக்க உகந்த வனப்பகுதியாக மாற தமிழ்நாடு அரசு வன உயிரினங்களைப் பாதுகாக்க எடுத்துவரும் வெற்றிகரமான நடவடிக்கைகளே காரணமாகும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்