குடும்ப தகராறில் விஷம் குடித்து விட்டுமோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

மயிலாடுதுறையில், குடும்ப தகராறில் விஷம் குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ெசன்ற தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-12 19:15 GMT

மயிலாடுதுறையில், குடும்ப தகராறில் விஷம் குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ெசன்ற தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

விவசாய தொழிலாளி

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா நெய்க்குப்பை தெற்கு தெருவை சேர்ந்த செல்லதுரை மகன் பிரபாகரன்(வயது 33). விவசாய தொழிலாளியான இவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

இவருடைய மனைவி மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் முளப்பாக்கம் கிராமத்துக்கு வந்த பிரபாகரன் தனது மாமியாரிடமும், மனைவியிடமும் 'வாழ பிடிக்கவில்லை, நான் சாகப் போகிறேன்' என்று தெரிவித்து விட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

மயங்கி விழுந்தது சாவு

மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் சீனிவாசபுரம் பகுதியை கடந்து சென்றபோது அவர் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது பிரபாகரன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. மேலும் அவர் பூச்சி மருந்து(விஷம்) குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது மயங்கி விழுந்ததும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக பிரபாகரனின் தந்தை செல்லதுரை, மயிலாடுதுறை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்