அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு: பொதுமக்களின் நடைபயணம் ரத்து

அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்களின் நடைபயணம் ரத்து செய்யப்பட்டது.

Update: 2023-06-04 18:30 GMT

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி-கல்லாத்தூர் செல்லும் சாலையை தரமாக அமைத்து தரக்கோரி பொதுமக்கள் நடைபயணம் ேமற்கொள்வதாக அறிவித்து இருந்தனர். இதையடுத்து உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கு ஆர்.டி.ஓ. பரிமளம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்த சாலையை வருகிற நவம்பர் மாதம் 22-ந் தேதிக்குள் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பழுதடைந்த மீன்சுருட்டி-கல்லாத்தூர் சாலையை வருகிற 7-ந் தேதி சரி செய்து கொடுக்கப்படும். மேலும் சாலையில் 400 மீட்டர் நீளமுள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களது நடைப்பயணத்தை ரத்து செய்தனர். மேலும் இந்த சாலையை சீரமைக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடைபெறும் எனக்கூறினர். பேச்சுவார்த்தையின் போது ஜெயங்கொண்டம் துணை கண்காணிப்பாளர் ராஜாசோமசுந்தரம் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் நடைப்பயண குழு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்