அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-10-20 00:58 IST

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் க.அருள்சங்கு, பொது செயலாளர் வெ.சரவணன், பொருளாளர் த.ராமஜெயம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக ஜூலை 1-ந் தேதியில் இருந்து முன் தேதியிட்டு அறிவித்துள்ளது. இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்களுக்கு வரும் காலங்களில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அறிவிக்கும் என்று தெரிவித்ததன் அடிப்படையில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என 16 லட்சம் பேர் பயன் பெறும் வகையில் அகவிலைப்படியை 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக ஜூலை 1-ந் தேதியிலிருந்து முன் தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்