அம்பை வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வில் அம்பை வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.;

Update:2023-05-19 00:17 IST

அம்பை:

அம்பை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சி அடைந்தனர். 10-ம் வகுப்பில் 90 சதவீதத்திற்கு மேல் 19 பேரும், 80 சதவீதத்திற்கும் மேல் 48 பேரும், தனி பாடங்களில் 11 மாணவர்கள் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

அதேபோல் 12-ம் வகுப்பு தேர்வில் 90 சதவீதத்திற்கும் மேல் 18 பேரும், 80 சதவீதத்திற்கும் மேல் 39 பேரும், தனி பாடங்களில் 2 பேர் 100 மதிப்பெண்களும் பெற்றனர். மேலும் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12-ம் வகுப்பு மாணவர் கபிலாஷ் துரை 483 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், 96.6 சதவீத மதிப்பெண்களுடன் மண்டல அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்தார்.

சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் வீரவேல் முருகன், இணை இயக்குனர் ராஜ ராஜராஜேஸ்வரி, பள்ளி முதல்வர் சக்திவேல் முருகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்