விபத்தில் முதியவர் பலி

மதுக்கரை அருகே விபத்தில் முதியவர் பலியானார்.;

Update:2023-07-24 03:30 IST

மதுக்கரை

கோவை-பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே பேக்கரி முன்பு சம்பவத்தன்று இரவு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார் என்பது குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்