கடலில் இருந்து புத்தர் சிலையுடன் கரை நோக்கி வந்த ஆளில்லா தெப்பம்... தரங்கம்பாடி கடற்கரையில் பரபரப்பு
மீனவர்கள் அந்த தெப்பத்தை கயிறு மூலம் இழுத்து உப்பனாறு முகத்துவார கரையில் கட்டிவைத்தனர்.;
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, அப்பகுதியில் தெப்பம் ஒன்று மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அந்த தெப்பத்தை நெருங்கி சென்று பார்த்தனர்.
அப்போது அந்த தெப்பத்தில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில், ஒரு புத்தர் சிலை மட்டும் இருந்துள்ளது. மேலும் தெப்பமானது மூங்கில்களை கொண்டு கட்டப்பட்டு இருந்தது.
இதையடுத்து மீனவர்கள் அந்த தெப்பத்தை கயிறு மூலம் இழுத்து உப்பனாறு முகத்துவார கரையில் கட்டிவைத்தனர். பின்னர் இதுகுறித்து மீனவர்கள் கடலோர காவல்படையினரிடம் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து தெப்பத்தை ஆய்வு செய்து அது இலங்கையில் இருந்து வந்ததா, அல்லது சீனாவில் இருந்து வந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.