அந்தோணியார் ஆலய தேர்பவனி

அந்தோணியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது.

Update: 2023-06-12 19:45 GMT

திருச்சி, மார்சிங்பேட்டையில் உள்ள அர்ச்.அந்தோணியார் ஆலயத்தில் 122-வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் நவநாள் திருப்பலி நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெளி வீதி தேர்பவனி நேற்று இரவு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) உள் வீதி தேர்பவனி நடக்கிறது. விழாவின் தொடர்ச்சியாக நாளை (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு அன்னதானமும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்