மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
செங்கோட்டையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.;
செங்கோட்டை:
செங்கோட்டை பஸ்நிலைய வளாகத்தில் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் மது அருந்துதல் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிராக விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டை தாசில்தார் முருகுசெல்வி தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வருவாய் ஆய்வாளா் மாடசாமி, கிராம நிர்வாக அலுவலா் ஆயிஷாபானு ஆகியோர் முன்னிலை வகித்தனா். சங்கரன்கோவில் கலைவாணா் நாட்டுப்புற கலைக்குழுவின் சார்பில் மது அருந்துதல் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணா்வு பாடல்கள், கரகாட்டம் நடந்தது. மேலும் மது ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக உதவியாளா்கள் மணிகண்டன், முருகையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.