அரிசி அரவை ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் சோதனை

நுகர்பொருள் வாணிபக்கழக அரிசி அரவை ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

Update: 2022-09-11 18:45 GMT

நுகர்பொருள் வாணிபக்கழக அரிசி அரவை ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

போலீசார் சோதனை

தமிழக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஆபாஷ் குமார் தமிழக முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், நுகர் பொருள் வாணிபக் கழகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அரிசி அரவை ஆலைகளிலும் திடீர் சோதனை நடத்தி முறைகேடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அதன்பேரில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார், இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட் மேரி ஆகியோர் தலைமையில் போலீசார் சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டையில் உள்ள 4 அரிசி அரவை ஆலைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

சோதனை தொடரும்

இந்த அரிசி அரவை ஆலைகளில் முறைகேடுகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இன்னும் நெல் கொள்முதல் தொடங்கப்படாத நிலை உள்ளதால் அங்கு சோதனை நடத்த இயலவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.அரிசி அரவை ஆலைகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்